Home » » Mannar citizen forum and WHF Federation hand over the petition

Mannar citizen forum and WHF Federation hand over the petition

Written By Freedam to the nation resettlement of IDPs on Friday, June 28, 2013 | 12:09 AM

Manner citizen forum and Women headed family federation  hand over the petition to the Silavathurai DS office in 26 th June 2013 

வியாழக்கிழமை, 27 ஜூன் 2013 16:23 0 COMMENTS
 -எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறையில் மீள்குடியேறிய முஸ்ஸிம் மக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறுக் கோரி நேற்று புதன்கிழமை முசலி பிரதேச சபையின் தலைவர் அப்புல் பகாத் எகியானிடம் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.

-
குறித்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

1990
ஆம் ஆண்டில் நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலை காரணமாக சிலாவத்துறை மக்களாகிய நாங்கள் புத்தளம் மற்றும் கற்பிட்டி ஆகிய பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்தோம்.

2009
ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற நிலையில் மீண்டும் எமது சொந்த இடமான சிலாவத்துறையில் குடியமர்வதற்காக வந்த வேளையில் எமது காணியினை கடற்படை அபகரித்து வைத்துள்ளதை பார்க்கக் கூடியதாக இருந்தது.

இருந்த போதிலும் அதற்கு பதில் காணியாக அரசாங்கத்தினால் ஒரு குடும்பத்திற்கு 20 பேச்சஸ் காணி வழங்கப்பட்டு மக்களை மீள்குடியேறுமாறு பணிப்புரை வழங்கப்பட்டதற்கு அமைவாக எமக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 50 குடும்பங்கள் மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றோம்.

கடந்த 2 வருடத்திற்கு மேலாக 56 வீட்டுத்திட்டத்திற்கு அப்பால் புதிய பிரதேச சபை இருக்கின்ற இடத்தில் இருந்து கொக்குப்படையான் வரைக்கும் அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டு தற்காலிக கொட்டகைக்குள் அமைத்து காட்டு யானைகளின் தொல்லைக்குள்ளும் பாம்புகளின் அட்டகாசத்திற்குள்ளும் எங்களின் வாழ்நாட்களை கழித்துக்கொண்டு வருகின்றோம்.

இங்கு 25 இற்கு மேற்பட்ட பாடசாலை மாணவ மாணவிகள் இருக்கின்றார்கள். நோயாளிகள் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்கள் வயோதிபர்கள் மற்றும் குடும்பத் தலைமைத்துவப் பெண்கள் 33 பேர் என பலர் வாழ்ந்துவருகின்றோம்.

இங்கு வாழும் மக்களாகிய நாங்கள் அனைவரும் அன்றாடம்  எங்களுடைய சிறிய அளவு வருமானத்திலேயே பிள்ளைகளின் கல்வி செலவு மற்றும் மருத்துவசெலவுகளை சீர் செய்துகொண்டுவருகின்றோம்.

தொடர்ந்தும் இங்குவாழும் மக்களாகிய நாம் முக்கியமான பிரச்சினைகளை கிராமமட்டத்தில் எதிர்நோக்கி கொண்டு 
வருகின்றோம். இவற்றினை நாங்கள் முன்வைக்கின்றோம் .

மின்சாரம் - 

முசலி பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் மின்சாரம் மின்னிக் கொண்டு இருக்கின்ற வேளை எமது பகுதி இருட்டுக் கசமாக காணப்படுகின்றது. இரவில் யானைகளின் அட்டகாசம் மற்றும் விச ஜந்துக்களின் நடமாட்டம் அனைத்தும் எம்மை கலங்கவைத்தக்கொண்டு இருக்கின்றது. இது மட்டுமன்றி இரவில் பாடசாலை மாணவ மாணவிகள் கூட தங்களின் கல்வியை  தொடர்ந்து கற்க முடியாத நிலைகாணப்படுகின்றது. 

மண்ணெண்ணெய் கூட வாங்கமுடியாத நிலைகாணப்படுகின்றது. இன் நிலையினை மாற்றி எமதுமக்களும் ஏனைய மக்கள் போன்று மின்சாரத்தில் வாழும் நிலையினை உருவாக்கித்தருமாறு  கோரிக்கை விடுகின்றோம்.

மலசலக்கூடம்- 

மக்களாகிய நாங்கள் 2 வருடமாகியும் மலசலக் கூடம் இல்லாமல் காட்டிற்குள்ளே மலசலம் கழிக்க செல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

ஆனால் காட்டிற்குள் செல்லும் பெண்களாகிய நாங்கள் மிகவும் பயத்திலும் மற்றும் ஏதாவது விபரிதங்கள் நடக்கக் கூடுமோ என எண்ணி மலசலம் கழிக்கசெல்ல வேண்டிய தேவைப்பாடு உள்ளது.

இது ஒரு பக்கம் இருக்கத்தக்கதாக தற்போது காற்றடி காலம் மலசலகழிவு நுர்நாற்றம் எம்மை நோய்வாய்படுவதற்கு இழுத்துச் செல்லுகின்றது.

மற்றும் சுவாசிக்க முடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். இந்நிலையினை மாற்றி மலசலக் கூட வசதியினை ஏற்படுத்திதருமாறு  கேட்டு நிற்கின்றோம்.

வதிவிடம்

மக்களாகிய நாங்கள் 2 வருடமாகியும் இன்னமும் தற்காலிக கொட்டகைக்குள் தான் வாழ்ந்து வருகின்றோம். தற்காலிக கொட்டகைக் கூட செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

இந்தநிலை நீடித்தால் இனி மழைகாலம். எவ்வாறு மக்களாகிய நாங்கள் இதற்குள் வாழ்வது என்று தெரியாமல் என் நேரமும் யோசித்துக் கொண்டு இருக்கின்றோம். 

மக்களின் நிலையினை கருத்தில் கொண்டு நிரந்தர வீடு தற்போது இல்லாவிட்டாலும் மழைக்காலத்தில் மக்களாகிய நாங்கள் கரை ஒதுங்குவதற்காகவாவது தற்காலிக கொட்டகையினை சீர் செய்து தருமறு  கேட்டு நிற்கின்றோம்.

வீதி 

2
வருடமாகியும் இன்னமும் எமது உள்ளக வீதிகள் திருத்தப்படாமல் காணப்படுகின்றது. குறிப்பாக 56 வீட்டுத்திட்டத்தினுடாக எமது பகுதிக்கு செல்லும் குறுகிய பாதையில் பெரிய அளவிலான பாலம் காணப்படுகின்றது.

2012
ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் இந்த பாலம் உடைந்து போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து காணப்படுகின்றது.

பலர் அதனால் வரும் போது விபத்துக்குள்ளாகவேண்டிய நிலை காணப்படுக்கினறது.  எமது பகுதியில் காணப்படும் உள்ளக வீதிகள் மழைகாலத்தில் சேறும் சகதியுமாக காணப்படும் நிலையில்   பாடசாலை மாணவ, மாணவிகள் கூட பெரிதும் துன்பத்திற்கு ஆளாகின்றார்கள். 

எனவே மக்களின் போக்குவரத்துக்கள் சீராக இடம்பெற இதனை கருத்தில் கொண்டு உள்ளக வீதிகள் மற்றும் உடைந்து காணப்படும் பாலம் ஆகியவற்றினை சீர் செய்து தருமாறு கேட்டு நிற்கின்றோம்.

குடிநீர்

நீர் ஆனது மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இருந்தாலும் பிரதேச சபையால் கொண்டு தரப்படுகின்ற நீர் 1 கிழமைகளில் ஒரு தடவைமாத்திரம் தான்.

இதனால் மக்களாகிய நாங்கள் பள்ளம் கிண்டி நீர் எடுத்து அருந்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. 
எனவே இக் குடி நீர் பிரச்சினையினை தீர்ப்பதற்கான நடவடிக்கையாக கிழமையில் 2 தடவையாவது எமக்கு நீர் வழங்குவதற்கான ஒழுங்கினை மேற்கொண்டு தரும்படியாக   கேட்டுநிற்கின்றோம்.

இவை அனைத்தும் எமது பகுதியில் காணப்படும் அதி முக்கியமான பிரச்சினைகளாக காணப்படுகின்றது. 

எனவே,தாங்கள் ஒரு முறை எமது குடியிருப்பு பகுதிக்கு வருகை தந்து எமது துன்பங்களை நேரில் பார்வையிட்டு பிரச்சினைகளை கண்டறிந்து உங்கள் பிரதேச மக்கள் ஏனையவர்கள் போல் சந்தோசமாக வாழ்வதற்கான ஏற்பாட்டினை செய்து தருமாறு மிகவும் அன்பாகவும் பணிவாகவும் கிராமிய மட்டபிரஜைகள் குழு ஊடாகவும், சிலாவத்துறை அன்நூர் பெண்கள் தலமைத்துவக் குழு ஊடாகவும் தயவன்புடன் கேட்டு நிற்கின்றோம்' என்றும் அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது


Share this article :

Post a Comment

Blog Archive

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Freedom to the Nation - Resettlement of IDP - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger